சுடச்சுட

    

    அகில இந்திய கட்டுநர் சங்கக் கிளை தொடக்கம்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 28th March 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய கட்டுநர் சங்க புதியக் கிளை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவில், தஞ்சாவூர் கிளைத் தலைவர் இளஞ்சேரன் வரவேற்புரையாற்றினார். ஆதப்பன், ஆர்.இளங்கோவன், பொறியாளர் ஆர்.செல்வகணபதி, ராதாகிருஷ்ணன், செல்வகுமார், இளஞ்சேரன், ரகுநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய மையத்தை தொடங்கி வைத்தனர்.

    திருத்துறைப்பூண்டி மையத் தலைவராக பொறியாளர் செல்வகுமார், செயலராக பொறியாளர் கைலாசநாதன், பொருளாளராக சொக்கலிங்கம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் சங்கத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

    தற்போதைய மாநிலத் தலைவர் ரகுநாதன், சாசன உறுப்பினர்கள் 30 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கிப் பேசினார். தஞ்சை மைய முன்னாள் தலைவர்கள் ராஜகோபால், பாலசுந்தரம், அய்யப்பன், ராஜசேகரன், பொருளாளர் குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொறியாளர்கள் சோமசுந்தரபாரதி, சங்கர் ஆகியோர்

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். செயலர் கைலாசநாதன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai