சுடச்சுட

    

    இலவச போட்டித் தேர்வு பயிற்சிக்கான தகுதித் தேர்வு

    By திருவாரூர்  |   Published on : 28th March 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் ஆர்பிட் ஐஏஎஸ் அகடாமி நிறுவனத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேருவதற்கான தகுதித்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஆர்பிட் ஐஏஎஸ் அகாடமி உள்ளது. இந்த அகாடமியில் எஸ்.கே.எம் அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 1,2,4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர், முதுகலை ஆசிரியர் தேர்வு, ஸ்லெட், நெட், வங்கி போட்டித் தேர்வுக்கு ஓராண்டுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இப்பயிற்சியில் சேருவதற்கான தகுதித் தேர்வு திருவாரூர் கஸ்தூரிபா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கான நேர்காணல் திருவாரூர் தெற்கு வீதியிலுள்ள ஆர்பிட் ஐஏஎஸ் அகாடமியில் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது என அகாடமி நிர்வாக இயக்குநர் க. ரமேஷ்குமார் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai