சுடச்சுட

    

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும்: பாட்டாளி தொழிற்சங்கம் வலியுறுத்தல்

    By திருவாரூர்  |   Published on : 28th March 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பாட்டாளி தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பாட்டாளி தொழிற்சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பிசி, பிகேஆர், எம்ஆர்எம் உதவியாளர் மற்றும் ஆபரேட்டர், உதவி மேலாளர் ஆகியோர்களின் அடிப்படை சம்பளத்தை மாற்றி அமைக்கவேண்டும்.

    காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கும் வீட்டுக்கடன் தொகையை ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

    மேலாளர்கள் முதல் அடிப்படை பணியாளர்கள் வரையிலான பணி நிலைகளுக்கு பணி முதிர்ச்சிப் பட்டியல் வெளியிட வேண்டும், நவீன அரிசி ஆலைப் பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு 240 நாள்களுக்குப் பணப் பயன்பெற அரசானை வெளியிட வேண்டும், 556 தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சுமைத் தூக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய உணவுக் கழகத்தில் வழங்குவது போன்று கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு, சங்க மாநிலத் தலைவர் பா.மணிமாறன் தலைமை வகித்தார். பேரவைத் தலைவர் நந்தகோபால், பொதுச்செயலாளர் ராம.முத்துகுமார், பொருளாளர் க.ராமலிங்கம், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.கே.மாறன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai