சுடச்சுட

    

    "நாட்டை வடிவமைக்கும் பொறுப்பு பொறியாளர்களுக்கு உண்டு'

    By நீடாமங்கலம்  |   Published on : 28th March 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டை வடிவமைக்கும் பொறுப்பு பொறியாளர்களுக்கு உள்ளது என, அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ஜி.பாஸ்கரன் கூறினார்.

    நீடாமங்கலம் அருகே கோயில்வெண்ணியில் உள்ள அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 17- ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.பழனிவேல் தலைமை வகித்தார். 

    தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ஜி.பாஸ்கரன் பங்கேற்று இளம் மற்றும் முதுநிலைப் பட்டதாரி பொறியாளர்கள் 508 பேருக்கு தங்கப் பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது:

    பொறியாளர் படிப்பு என்பது சாதாரணப் படிப்பல்ல, நீங்கள் அனைவரும் புத்திசாலிகள், இந்த நாட்டை வடிவமைக்கும் பொறுப்பு உங்களுக்கும் உண்டு.

    பொறியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நிரம்ப பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும், அதில் போராடி வெற்றிபெற வேண்டும். பொறியாளர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளின்தான் வேலைக்குச் செல்ல முடியும் என்ற நிலை இல்லை. பொறியாளர்கள் சுயதொழில் தொடங்கினாலும் அதில் வெற்றி பெற முடியும்.

    எந்த நிலையிலும் பொறியாளர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவில், கல்லூரி நிர்வாக அறங்காவலர் மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ராமமூர்த்தி, கல்லூரி நிர்வாக அதிகாரி டாக்டர் ச.தமிழரசன், கல்லூரி அறங்காவலர்கள் தேவி, உஷா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai