Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

    By மன்னார்குடி  |   Published on : 28th March 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.த.செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செய்தி தொடர்பாளர் அ.சுரேஷ், மாவட்டப் பொருளாளர் ஆ.வெற்றி, முன்னாள் மாவட்டச் செய்தி தொடர்பாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபடுவது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவர்களை நியமிப்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மண்டலச் செயலாளர் விவேகானந்தன்,தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் இரா.ரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். நகரச் செயலாளர் பா.இந்திரஜித், ஒன்றியச் செயலாளர்கள் கோ.ஜெயராஜன் (மன்னார்குடி), மு.முருகையன் (கோட்டூர்), செந்தில் (முத்துப்பேட்டை), ராபின்ராஜ் (கூத்தாநல்லூர்), தங்கசுரேஷ் (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai