சுடச்சுட

    

    கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் சரண்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 29th March 2016 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி, செங்கிப்பட்டி பகுதிகளில் நிகழ்ந்த கொலை வழக்குத் தொடர்பாக மூன்று பேர் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

    திருச்சி கே.கே.நகர் காவல் சரகத்தில் மார்ச் 23-ஆம் தேதி ஹாஜாஉசேன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுவந்த திருச்சி சுப்ரமணியபுரம் கலியபெருமாள் மகன் முருகனந்தம் (34) திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கேஎஸ்.எஸ்.சிவா முன்னிலையில் திங்கள்கிழமை சரணடைந்தார்.

    இதேபோல், தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி காவல் சரகத்தில் மார்ச் 24-இல் திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை பகுதியைச் சேர்ந்த புஷ்பவள்ளி (40) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த பட்டுக்கோட்டை அருகே உள்ள புலவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு மகன் மாணிக்கவாசகம் (28), அதிராம்பட்டினம் அருகே உள்ள ராமலிங்கம் மகன் விஜயகுமார் என்கிற காசிநாதன் (35) ஆகிய இருவரும் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

    இவர்கள் இருவரையும் 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai