சுடச்சுட

    

    100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேருந்து நடத்துநர்களின் பையில் விழிப்புணர்வு "ஸ்டிக்கர்

    By 'திருவாரூர்,  |   Published on : 29th March 2016 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவாரூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நடத்துநர்களின் பணப்பையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

    வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், விளம்பர பதாகைகள் வைத்தல், ஊர்வலங்கள் என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒருபகுதியாக, திருவாரூர் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளின் நடத்துநாóகள் வைத்துள்ள பைகளில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை ஆட்சியர் எம்.மதிவாணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். மேலும், பயணிகளுக்கு விழிப்புணாóவு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், திருவாரூர் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரா.முத்துமீனாட்சி, வட்டாட்சியர் ராஜன்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai