Enable Javscript for better performance
அரசு மருத்துவமனையில் வாக்காளர் விழிப்புணர்வு முத்திரையிடப்பட்ட அனுமதிச் சீட்டு விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனையில் வாக்காளர் விழிப்புணர்வு முத்திரையிடப்பட்ட அனுமதிச் சீட்டு விநியோகம்

    By திருவாரூர்  |   Published on : 30th March 2016 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து வாசகம் பொறிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

    வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட, இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைப்பெற வருகிறவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு, மருந்துசீட்டுகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் முத்திரையிடப்பட்டு வழங்கப்படுகிறது.

    இப்பணியை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

    வாக்குப்பதிவுக்கு சில நாள்கள் இருக்கும் வரை இப்பணி நடைபெறும் என தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai