Enable Javscript for better performance
ஆடவர் இரட்டையர் இறகுப்பந்து போட்டி - Dinamani

சுடச்சுட

    

    ஆடவர் இரட்டையர் இறகுப்பந்து போட்டி

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 30th March 2016 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தில் லயன் ராஜப்பா இறகுப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற இரண்டாமாண்டு ஆடவர் இரட்டையர் இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்தப் போட்டி மார்ச் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், கம்பம், மதுரை, வத்தலக்குண்டு, திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 105 அணிகள் பங்கேற்றன.

    மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வேதரத்தினம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில், முதலிடம் பிடித்த மன்னார்குடி சாய் விக்னேஷ் அணிக்கு ரூ.10,000-மும், இரண்டாமிடம் பிடித்த பட்டுக்கோட்டை புகழ் கார்த்திக் அணிக்கு ரூ.8,000-மும், மூன்றாமிடம் பிடித்த திருச்சி வரதன் அணிக்கு ரூ.6,000-மும், நான்காமிடம் பிடித்த ஜாம்புவானோடை சி.ஆர். இறகுப்பந்து கழகத்துக்கு ரூ.4,000-மும் பரிசளிக்கப்பட்டன.

    ராஜப்பா நினைவு அறக்கட்டளை இயக்குநர் சி.பாலசுந்தரம், சிதம்பர ராமஜெயம் அறக்கட்டளை இயக்குநர் சித.ராமகிருஷ்ணன், ரோட்டரி சாசனத் தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி, சி.ஆர்.பேட்மிண்டன் கிளப் செயலாளர் சி.ஆர்.ராம்மோகன் ஆகியோர் பரிசகளை வழங்கிப் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை வர்த்தகக் கழக பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன், சி.ஆர். பேட்மிண்டன் கிளப், பிடாரி அம்மன் பேட்மிண்டன் கிளப், நியூ பாரத் பேட்மிண்டன் கிளப், மங்கலூர் பேட்மிண்டன் கிளப், நம்மங்குறிச்சி பேட்மிண்டன் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai