சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வூதியர்கள் நேர்காணலில் தவறாது பங்கேற்க வேண்டும் என மாவட்ட கருவூல அலுவலர் பீ.ஜமீலா கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    திருவாரூர் மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அவரவர் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் ஓய்வூதியப் புத்தகம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான்கார்டு நகல், 2 மார்பளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தவறாது நேரில் ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நேர்காணலின்போது, ஓய்வூதியர்கள் படிவம் 6, மறுநியமனத்தில் உள்ளவர்கள் படிவம் 6,7,8, குடும்ப ஓய்வூதியர்கள் படிவம் 6,7,9 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai