சுடச்சுட

  

  கடந்த ஆட்சியின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிக்க திமுக முடிவு

  By திருவாரூர்,  |   Published on : 30th March 2016 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த ஆட்சியில் திமுக செய்த சாதனைகளை விளக்கிக் கூறி, வாக்குச் சேகரிப்பதென செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

  திருவாரூரில், திமுக மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் போட்டியிட்டால், அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச்செய்வது, வாக்காளர்களுக்கு அதிமுக பணப்பட்டுவாடா செய்யுமானால் அதைத் தடுத்து நிறுத்தி, ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற பாடுபடுவது.

  திருவாரூர் மாவட்டத்தில் நான்கு பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக ஆட்சியின் அவலத்தையும், திமுக ஆட்சியின் சாதனைகளையும் வீடுவீடாகச் சென்று அனைத்து தரப்பு மக்களிடையே எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்து, திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கட்சியின் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், நகரச் செயலாளர் பிரகாஷ், நகராட்சித் துணைத் தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்டக் கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமை அமைப்பாளர் தாஜீதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai