சுடச்சுட

  

  பூசங்குடி விஸ்வநாதப்பெருமாள் கோயிலில் திருடப்பட்ட கற்சிலைகள் மீட்பு; நால்வர் கைது

  By திருவாரூர்,  |   Published on : 30th March 2016 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் அருகே பூசங்குடி விஸ்வநாதப்பெருமாள் கோயிலில் பழங்கால கற்சிலைகளைத் திருடிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். சிலைகளும் மீட்க்கப்பட்டன.

  திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே பூசங்குடியில் பழைமைவாய்ந்த விஸ்வநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கற்சிலைகள் கடந்த 27.8.2013 அன்று திருடு போனது. இதுகுறித்து வடமாதிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்தனர்.

  இந்நிலையில், பேரளம் காவல் சரகப் பகுதியில் கற்சிலைகள் திருடியதாக கடலூர் கொருக்கல்பட்டு ரா.சத்தியநாராயணன் (51), காரைக்கால் கல்லறைப்பேட்டை அ.ஆனந்தராஜ் (36), கடலூர் கே.என்.பேட்டை த.சாமிநாதன் (22), சங்கரன்பந்தல் இலுப்பூர் சி.முத்துகுமாரசாமி (37) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

  இதுகுறித்து தகவலறிந்த வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளர் ரேகாராணி, திருச்சி சிறையிலிருந்த நான்கு பேரையும் செவ்வாய்க்கிழமை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டபோது, பூசங்குடி கோயிலில் சிலைகளைத் திருடியதை நான்கு பேரும் ஒப்புக்கொண்டனர்.

  இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்து, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) தேன்மொழி முன்பாக முன்னிலைப்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

  மேலும், நான்கு பேரும் கொடுத்த தகவலின் பேரில், பூசங்குடியில் திருடப்பட்ட பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி கற்சிலைகளை சென்னையிலிருந்து மீட்டுவந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai