சுடச்சுட

  

  தாக்குதலில் இறந்தவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 31st March 2016 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டியில் தாக்குதலில் காயமடைந்த முதியவர் உயிரிழப்புக்கு காரணமானவரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் புதிய பேருந்து நிலையத்தில் சடலத்துடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வீரன் நகரசைச் சேர்ந்தவர் குஞ்சு (65). இவரது மனைவி சரோஜா (50).

  இவர்கள் இருவரையும் கடந்த பிப். 20 ஆம் தேதி இதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் தாக்கினாராம். இதில் குஞ்சுவுக்கு தலையில் பலத்த காயமும், சரோஜாவுக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இருவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி குஞ்சுவுக்கு தலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்யாத நிலையில், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரனிடம் குஞ்சுவின் மனைவி சரோஜா புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  மருத்துவமனையிலிருந்து கடந்த 23 ஆம் தேதி வீடு திரும்பிய குஞ்சு, தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தார். எனினும் அவர் புதன்கிழமை (மார்ச் 30) அதிகாலை இறந்தார்.

  இந்நிலையில், குஞ்சுவின் சடலத்தை திருத்துறைப்பூடி புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே கிடத்தி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். கண்ணதாசன், காவல் ஆய்வாளர் அமுதாராணி, உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் பழனிவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai