சுடச்சுட

  

  திருவாரூரில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  ஏப். 1 முதல் 10 ஆம் தேதி வரை திருவாரூர் ஒன்றியத்திலுள்ள 34 ஊராட்சிகளில் 84 பூத்கமிட்டிகள் அமைக்கும் பணியை மேற்கொள்வது, கிராமப்புறங்களில் அனுமதி பெற்று சுவர்விளம்பரங்கள் செய்வது, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற திட்டமிட்டு பணியாற்றுவது, வீடுவீடாகச் சென்று வாக்காளரைச் சந்தித்து வாக்கு கேட்பது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைக் கண்காணித்து அதனைத் தடுப்பது, கூட்டணிக் கட்சிகளின் செயலர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்திக் கொண்டு தேர்தல் பணிகளை முறைப்படுத்திக் கொள்வது, திருவாரூர் நகரத்திலுள்ள 30 வார்டுகளிலும் இதேபோன்று பணிகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai