சுடச்சுட

  

  பாதுகாப்பு விழிப்புணர்வு ரயில் திருவாரூர் வருகை

  By திருவாரூர்,  |   Published on : 31st March 2016 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு ரயில் புதன்கிழமை திருவாரூர் வந்தடைந்தன.

  திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரயில் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

  ரயில் பயணத்தின்போது பயணிகள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை விளக்கும் வகையில் இந்த ரயில் பெட்டி காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

  மயக்க மருந்து கலந்த உணவுகள் மூலம் ரயில்களில் நடக்கும் திருட்டை தவிர்ப்பது, பயணிகள் தங்களுக்குத் தேவையான அவசர உதவிக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், ரயில் இருப்புப் பாதைகளைக் கடக்கும் முன் கவனிக்க வேண்டியவை, ரயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கும் குறும்படமும், விழிப்புணர்வு வண்ணப் படங்களும் ரயில் பெட்டியில் காட்சிப்படுத்தப்பட்டன.

  புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ரயில் பெட்டி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவ, மாணவிகள் இந்தப் பாதுகாப்பு விழிப்புணர்வு ரயில் பெட்டியைப் பார்வையிட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai