சுடச்சுட

    

    "பேரவைத் தேர்தலில் வணிகர் சங்க ஆதரவு குறித்து மே 5 இல் அறிவிப்பு

    By 'திருவாரூர்,  |   Published on : 31st March 2016 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்பேரவைத் தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆதரவு யாருக்கென்று மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ள வணிகர் சங்க மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

    திருவாரூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    தமிழகத்தில் வாக்காளார்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது. 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தமிழகத்தில் ஒவ்வொரு வர்த்தகச் சங்கத்தினரும் செயல்படுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி வருகிறது.

    தமிழக தேர்தல் ஆணையம் சாமானிய மக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர்களின் வாகனங்களை கடுமையாக சோதனை செய்கிறது. ஆனால், அரசியல் பிரமுகர்களின் வாகனங்களை தேர்தல் அலுவலர்கள் சோதனையிடுவதில்லை. ஏப். 12-இல் திருச்சியில் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பேரவைத் தேர்தலில் வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கு வணிகர்களின் ஆதரவை வருகிற மே மாதம் நடைபெறவுள்ள வணிகர்களின் மாநாட்டில் தெரிவிக்கப்படும் என்றார் விக்கிரமராஜா.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai