சுடச்சுட

  

  பேருந்தில் பயணிகளிடம் திருடிய இரு பெண்கள் கைது

  By திருவாரூர்  |   Published on : 31st March 2016 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பேருந்தில் பயணிகளிடம் பணம் திருடிய இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

  திருவாரூர் அருகேயுள்ள அலிவலம் மஜித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் நாச்சியார் (35). இவர் செவ்வாய்க்கிழமை கும்பகோணத்திலிருந்து அரசுப் பேருந்தில் திருவாரூருக்கு வந்தார். பேருந்து நிலையத்தில் இறங்கும்போது இரு பெண்கள் தனது கைப்பையில் வைத்திருந்த ரூ. 200-ஐ திருடியுள்ளனர்.

  இதையறிந்த ஜெகபர் நாச்சியார் பணம் திருடிய இருவரையும் பிடித்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் ஒப்படைத்தார்.

  போலீஸாரின் விசாரணையில் பேருந்தில் திருடியவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை முத்துக்குலத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (65), சரோஜா (67) என்பது தெரியவந்தது.

  இதுகுறித்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai