Enable Javscript for better performance
காவிரி போராட்டத்தில் நடிகர் சங்கம் பங்கேற்காதது வேதனையளிக்கிறது: பி.ஆர். பாண்டியன்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி போராட்டத்தில் நடிகர் சங்கம் பங்கேற்காதது வேதனையளிக்கிறது: பி.ஆர். பாண்டியன்

    By DIN  |   Published on : 28th November 2016 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் காவிரி போராட்டத்தில் நடிகர் சங்கம் பங்கேற்காதது வேதனையளிக்கிறது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிர் டெல்டா  மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இனிவாழ முடியாது என்ற நெருக்கடி நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தற்கொலைக்கும், அதிர்ச்சி மரணங்களுக்கும் 15 விவசாயிகள் ஆளாகியுள்ளனர். காவிரியின் குறுக்கே ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் அணைகள் கட்ட ஜனவரி 2ஆவது வாரத்தில் அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டில் தெரிவித்திருப்பது, டெல்டா விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
    காவிரியில் தண்ணீரைக் கொடுக்கக் கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடாமல் கர்நாடகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர்கள் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள நடிகர்கள் இதுவரை காவிரி என்று சொல்வதற்கே தயங்குவது மிகப்பெரிய வேதனையளிக்கிறது என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai