Enable Javscript for better performance
சுகாதார ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சுகாதார ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 28th November 2016 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும்  சுகாதார ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை  ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
    திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர் சங்க  மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    இதர தீர்மானங்கள்: தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் சுகாதார ஆய்வாளர்களின் கீழ் கொசுப்புழுக்களை ஒழித்திடும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    சங்க மாவட்டச் செயலர் சத்தியமூர்த்தி தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் அருணகிரி, பொதுச் செயலர் தயாளன், மாவட்டத் தலைவர் கோபு, அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் அரவிந்தன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai