Enable Javscript for better performance
தந்தையை கொன்ற மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
    கொரடாச்சேரி அருகேயுள்ள வெண்ணவாசலைச்  சேர்ந்தவர் புரோட்டா மாஸ்டர் அப்துல்ரசாக் (50), இவரது மனைவி மாரியம்மாள் (45), மகன் ஒளிமுகமது (26), மகள் ரோஜாராணி (23). ஒளிமுகமது சென்னையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
    இந்நிலையில், ரோஜாராணிக்கு இந்து மதத்தில் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஒளிமுகமது சென்னையிலிருந்து சனிக்கிழமை சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெண்ணவாசல் அருகில் சாலையோரத்தில் அப்துல்ரசாக் தலை நசுங்கிய நிலையில், சடலமாகக் கிடந்தார்.
    தகவலறிந்த கொரடாச்சேரி காவல் ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
    போலீஸார் விசாரணையில், தனது மகளுக்கு தன்னுடைய மதத்தில்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும் என  அப்துல்ரசாக் கூறினாராம். இதனால் ஏற்பட்ட தகராறில் அப்துல்ரசாக்கை ஒளிமுகமது கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவரை  போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai