Enable Javscript for better performance
நேரடி விதைப்பு செய்த சம்பா வயல்களில் கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நேரடி விதைப்பு செய்த சம்பா வயல்களில் கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

    By DIN  |   Published on : 28th November 2016 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    agri2

     

    திருவாரூர் மாவட்டத்தில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட சம்பா நெல் வயல்களில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கே. மணிவாசகம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    திருவாரூர் மாவட்டத்தில் காரக்கோட்டை,  மலவராயநல்லூர், திருப்பத்தூர், தில்லைவிளாகம்,  இடையூர்சங்கேந்தி, மேலபெருமலை போன்ற பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் நேரடி நெல் விதைப்பு  செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களின் விதைப்பு காலங்கள், தற்போது நெற்பயிர்களின் தன்மை போன்றவைகளை ஆய்வு செய்து, வேளாண்மைத் துறை மூலம் அரசின் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்கிறதா எனவும், வேளாண்மை பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்தும்  விவசாயிகளிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார். தொடர்ந்து திருத்துறைப்பூண்டி வட்டம், பனையூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து, மக்களிடம் தடையின்றி குடிநீர் கிடைக்கிறதா, அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற பொருள்கள் தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறதா எனவும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்  கேட்டறிந்தார்.
    இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தங்குத் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க மின்வாரிய பொறியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை சரி செய்ய சுழற்சி  முறையில் மின்வாரிய ஊழியர்களைக் கொண்டு குழு அமைத்து பராமரிக்க வேண்டும்.
    கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க உரிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த  வேண்டும். அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து, மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு பயிர்க் கடன் வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். சிறு, குறு விவசாயிகளும் பயன்பெறும் வகையில், பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தங்குத் தடையின்றி கிடைக்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றார் மணிவாசகம். கூட்டத்தில் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai