Enable Javscript for better performance
வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைப்பு: இன்று முதல் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைப்பு: இன்று முதல் சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 28th November 2016 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் (நவ. 28) முதல் டிச. 2-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    முகாமில் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்குகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் வங்கிக் கணக்குகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வங்கிக் கண்ககுள் மற்றும் இதர சேமிப்பு வங்கிக் கணக்குகள் ஆகியவற்றுடன் 100 சதவீதம் ஆதார் எண் இணைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
    வங்கிக் கணக்குகளுக்கு ருபே அட்டை ரகசிய குறியீட்டு எண் அனைவரும் பெற மற்றும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளுதல், இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்கு தொடங்கிட ஆவண செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
    எனவே, தங்கள் பகுதியில் நடக்கும் முகாமில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகள், களப்பணி வழி நடத்துநர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர்களிடம் கையெழுத்திட்ட ஆதார் அட்டை நகலை கொடுத்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
    நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஜன்தன் யோஜனா கணக்கு வைத்துள்ளவர்கள், அமைப்புசாரா பணியாளர்கள் தங்கள் நகராட்சி பேரூராட்சி அல்லது நகர பஞ்சாயத்து அலுவலகங்களில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களிடம் தங்கள் கையெழுத்திட்ட ஆதார் அட்டை நகலை கொடுத்து வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai