Enable Javscript for better performance
திருவாரூர் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம்  குறைந்துள்ளது: மருத்துவக் கல்லூரி முதல்வ- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம்  குறைந்துள்ளது: மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல்

    By DIN  |   Published on : 08th October 2016 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
    திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கில் மேலும் அவர் பேசியது:
    அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான நவீன சுவாசக் கருவிகள், குழந்தைகளின் உடல் சூட்டினை பாதுகாக்கும் கருவிகள், பிறவியிலேயே ஏற்படும் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் போட்டோதெரபி கருவிகளும் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளைத் தொடர் சிகிச்சை மூலம் கொழுகொழு குழந்தையாக மருத்துவர்கள் மாற்றுவது உளப்பூர்வமான சிகிச்சையை காட்டுகிறது என்றார் அவர்.
    கருத்தரங்கில், திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அசோகன், துணை இயக்குநர் மருத்துவர் செந்தில், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைப் பேராசிரியர் சீராளன், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையின் பேராசிரியரும் மாநில குழந்தைகள் சிகிச்சை முறையின் ஒருங்கிணைப்பாளருமான சீனிவாசன், பச்சிளம் குழந்தைகளுக்கான உயர் சிகிச்சை முறையில் பட்டம் பெற்ற மருத்துவர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கருத்தரங்கில் குழந்தைகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விநாடி- வினா போட்டியில் பங்கேற்ற மருத்துவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை குழந்தைகள் நலத்துறை பேராசிரியர்கள் கண்ணன், ஹேமசித்ரா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai