Enable Javscript for better performance
பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டையில் பேரிடர் கால மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கோரையாற்றில் நடைபெற்றது.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வனத்துறை அலுவலர் பார்த்தீபன், வேளாண்துறை இணை இயக்குநர் மயில்வாகனன் முன்னிலை வகித்தனர்.
    அவசரகால சிகிச்சை குறித்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். மீட்புப் பணிகள் குறித்து சிறப்பாக செய்து காட்டிய தீயணைப்பு வீரர்களைப் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் பாராட்டினார்.
    திருவாரூர் மாவட்டத்தில் மழை, வெள்ள காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் 212 கிராமங்கள் கண்டறியப்பட்டு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தீயணைப்புத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வெள்ள பாதிப்பை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என ஆட்சியர் தெரிவித்தார்.
    மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி, உதவி அலுவலர் குமார், நிலைய அலுவலர்கள் முத்துப்பேட்டை சிவக்குமார், திருத்துறைப்பூண்டி சேகர், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கோ.உதயகுமார், முத்துப்பேட்டை ஒன்றிய ஆணையர் சிவகுமார், வனச்சரகர் வீராச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai