Enable Javscript for better performance
அரசுக் கல்லூரியில் பாரதி முத்தமிழ் மன்றம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில், பாரதி முத்தமிழ் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இரா. பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் நா. தனராஜன் முன்னிலை வகித்தார்.
    சிறப்பு அழைப்பாளர்களை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் வெ. தமிழரசி அறிமுகம் செய்து வைத்தார். இரா. சிவக்குமாரன் தொகுத்து வழங்கினார்.
    பாரதி முத்தமிழ் மன்றத்தை கல்லூரி முதல்வர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் வீ. பன்னீர்செல்வம் "நெம்புகோல் கவிதைகள்' என்ற தலைப்பிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப்  பேராசிரியர் ஜா. ராஜா "எழுத்தினால் எது முடியும்' என்ற தலைப்பிலும் பேசினர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் செ. காளிமுத்து  வரவேற்றார், இல. பொம்மி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai