Enable Javscript for better performance
மன்னார்குடி அருகே கோஷ்டி மோதல்: 6 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தானில் வியாழக்கிழமை இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
    பெருகவாழ்ந்தானை அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்தவர்கள்  முத்தழகன் மகன்கள் வினோத்ராஜ், கோபிநாத். இவர்கள் இருவரும் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றபோது, புத்தகரம் அரசுப் பள்ளி அருகேயுள்ள வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில்  கீழே விழுந்தனராம்.
    இதைப் பார்த்து, அங்கு நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், அவரது உறவினர்கள் இருவர் கேலி கிண்டல் செய்தனராம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    இதையடுத்து, இருதரப்பினருக்கும் ஆதரவாக மேலும் சிலர் சேர்ந்துகொண்டு ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் நவீன்குமார் (19), கலியமூர்த்தி (53), ராம்கி (24), ராமகிருஷ்ணன் (26) ஆகிய 4 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும், வினோத்ராஜ் (27), முத்தழகன் (54) ஆகிய 2 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்  அனுமதிக்கப்பட்டனர்.
    இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதுதொடர்பாக, கோபிநாத்தை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai