Enable Javscript for better performance
ரயிலில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த திருப்பதி விரைவு ரயிலில் பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    மன்னார்குடியிலிருந்து திருப்பதிக்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பதியிலிருந்து  வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வந்து புறப்பட்ட அந்த ரயிலில் பயணம் செய்த மன்னார்குடியைச் சேர்ந்த கோமதியிடமிருந்து 5 பவுன் சங்கிலியை  மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக, ரயிலில் பாதுகாப்பில் இருந்த ரயில்வே போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai