Enable Javscript for better performance
"ரயில் மறியலில் விவசாயிகள் சங்கத்தினர் 2 ஆயிரம் பேர் பங்கேற்பர்'- Dinamani

சுடச்சுட

    

    "ரயில் மறியலில் விவசாயிகள் சங்கத்தினர் 2 ஆயிரம் பேர் பங்கேற்பர்'

    By DIN  |   Published on : 15th October 2016 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் தொடர் ரயில் மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர் என்று அச்சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.எஸ். கலியபெருமாள் கூறினார்.
    இதுகுறித்து நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வராத நிலை உள்ளது.
    இதைக் கண்டிக்கும் வகையில், வரும் 17, 18 ஆம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் 75 கி.மீ. தூரத்துக்கு இரு நாள்கள் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. கோயில்வெண்ணி முதல் அடியக்கமங்கலம் வரை திருவாரூர் முதல் பேரளம் வரை நடைபெறும் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் வேளாண் கருவிகளுடன் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என 1 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
    இந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2 ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai