Enable Javscript for better performance
ரயில் மறியல்: மன்னார்குடியிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ரயில் மறியல்: மன்னார்குடியிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு

    By DIN  |   Published on : 15th October 2016 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் மன்னார்குடியிலிருந்து 10 ஆயிரம் பேர் பஙகேற்பது என வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய, நகரக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    கட்சி உறுப்பினர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டுக்குழுக் கூட்டம் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். மாரியப்பன், நகர செயற்குழு உறுப்பினர் எம். சின்னக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி, நகரச் செயலர் வி. கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், ரயில் மறியலில் பங்கேற்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோ. தமிழரசன், பி. நாகேஷ், ஒன்றிய துணைச் செயலர் எஸ். ராகவன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் என். மகேந்திரன், ஒன்றியத் தலைவர் எஸ். ராஜாங்கம், இளைஞர் மன்ற ஒன்றியச் செயலர் எஸ். பாப்பையன், மாதர் சங்கச் செயலர் ஜி. மீனாம்பிகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai