Enable Javscript for better performance
ரயில் மறியல்: வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வணிகர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் கலந்துகொள்வர் என்று சங்கங்களின் பேரவை மாவட்ட அமைப்பாளர் இரா. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் உத்தரவுப்படி, திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வணிகர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
    மேலும், திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வணிகர்கள், இது விவசாயிகளின் போராட்டம் என்று இருந்துவிடக் கூடாது. இது ஒட்டுமொத்த தமிழகத்தின்  பிரச்னை. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க திரளாகப் பங்கேற்க வேண்டும்  என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai