Enable Javscript for better performance
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 15th October 2016 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு  உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாகப் பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.
    2011-ஆம் ஆண்டு செப். 30-ஆம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பு பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளி  இறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ. 100, பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 150, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 45, இதர வகுப்பினர் 40 வயதுக்குள்  இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000-க்குள் இருக்க வேண்டும்.
    மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 1000, உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவு செய்து 2016-ஆம் ஆண்டு செப். 30-ஆம் தேதியன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
    உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது. தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.
    தகுதியானவர்கள் இதற்கான விண்ணப்பத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நவ. 30-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
    உதவித்தொகை ஏற்கெனவே பெற்றுவருவோர் கவனத்துக்கு: மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி  ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
    அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து தவறாது நேரில்வந்து அளிக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai