வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 67 பேருக்கு ரூ. 33.33 லட்சம் மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் 2017-18 ஆம் நிதியாண்டில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்து, 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி, எம்பிசி, பி.சி, சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1.50 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்ச தொழில் கடனாக ரூ. 10 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ. 3 லட்சமும் மற்றும் வியாபாரத்துக்கு ரூ.1 லட்சமும் வங்கிகள் மூலம் 25 சதவீத மானியத்துடன் கடனாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க விரும்புவோர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பம் பெற்று, விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.