நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பாஸ்கரன் தலைமையேற்று தொடங்கி
வைத்தார்.
நெல் சாகுபடி உயர் விளைச்சல் பெறுவதற்கான தொழில்நுட்பங்களான நல்ல விதைகளைத் தேர்வு செய்தல், விதை நேர்த்தி, உரப் பயன்பாடு, நீர் மேலாண்மை முறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் வேம்பு உள்ளிட்ட தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை இறுதி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் வலியுறுத்தினார்.
இந்தப் பயிற்சியில் நல்ல தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறைகள், சூடோமோனாஸ் உயிரியல் கொல்லி மருந்து மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து பண்ணை மேலாளர் துரை.நக்கீரன் செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
திட்ட உதவியாளர்கள் சகுந்தலா, வேளாண்மையில் கணிப்பொறியின் பயன்பாடு குறித்தும், தெ.ரேகா நெல்லில் மதிப்புக்கூட்டுதல் பொருட்களைத் தயார் செய்தல் குறித்தும் எடுத்துரைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.