நீடாமங்கலம் வட்டம், பெரம்பூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீ ஜம்புநாதசுவாமி கோயில் மகாகுடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 12-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கி முதல்கால யாகபூஜைகளும், 13-ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.
14-ஆம் தேதி யாகசாலை பூஜை, ஹோமம், யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. பின்னர் மகாகும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரம்பூர் கிராமமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீஸார் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.