மன்னார்குடியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3.60 லட்சத்தை புதன்கிழமை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மன்னார்குடி ஜெயம்கொண்ட முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ரவி (31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், வங்கியில் செலுத்துவதற்காக தனது பைக்கில் ரூ. 3.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு சென்றார். வங்கியில் பணம் செலுத்தும் நேரம் முடிந்ததால், அப்பகுதியில் உள்ள காப்பித்தூள் விற்பனை கடையில் பைக்கை நிறுத்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து ரவி மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.