ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் 35 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கல்லூரி மாணவியர் விடுதிகள் 3, கல்லூரி மாணவர்கள் விடுதிகள் 3, பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகள் 29 இயங்கி வருகின்றன.
நிகழாண்டு இந்த விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவியார்களுக்கு ஜூலை 12-ஆம் தேதி வரையிலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 21-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பம் பெறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தேர்வுக்குழுவின் தேர்வு பள்ளி விடுதிகளுக்கு ஜூலை 13-ஆம் தேதியும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 22-ஆம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் 85 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர் 10 சதவீதம் மற்றும் இதர வகுப்பினர் 5 சதவீதம் சேர்க்கப்பட உள்ளனர் எனவே, விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி மூலமாகப் பெற்று, பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் மேலே குறிப்பிட்ட தேதிக்குள் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் மார்பளவு புகைப்படம் ஒட்டப்பட்டு இரு புகைப்படங்கள் கூடுதலாக இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்தில் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். புதிதாக சேர்க்கப்படும் மாணவ, மாணவியரும் ஏற்கெனவே தங்கி பயிலும் மாணவ, மாணவியரும் கண்டிப்பாக வங்கிக் கணக்கு தொடங்க
வேண்டும்.
ஆதார் நகல் அட்டை இணைக்க வேண்டும். விடுதியில் சேர்க்கப்படும் மாணவ, மாணவியரின் பெற்றோரின் வருமானவரம்பு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம், அனைத்து விடுதிகளிலும், இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் அனுமதிக்கப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com