திருத்துறைப்பூண்டியில் தனியார் மருத்துவமனையில் தொடரும் உயிரிழப்புகளைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் முகம்மது மிஸ்கின் தலைமை தாங்கினார். மாநிலச் செயலர் அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார்.
தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையில் கவனக்குறைவு காரணமாக பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் மாநில பொதுச் செயலர் முகம்மது யூசுப் வலியுறுத்தி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.