அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி, திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளில், மாவட்டத்தில் 11 பள்ளிகளிலிருந்து 61 மாணவர்கள், 85 மாணவியர் பங்கேற்றனர். போட்டி 13, 15, 17 வயது என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. 13 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவியருக்கு 15 கிலோ மீட்டர், 15 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர், மாணவியருக்கு 15 கிலோ மீட்டர், 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர், மாணவியருக்கு 15 கிலோ மீட்டர் தொலைவு என போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எ. ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில், ஹாக்கி பயிற்சியாளர் எம். ரோஸ்பாத்திமாமேரி, யோகா பயிற்சியாளர் கு. பட்டாபிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.