தமிழக அரசால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை

தமிழகத்தில் கடந்த 10 மாதமாக அதிமுக அரசால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த 10 மாதமாக அதிமுக அரசால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து திருவாரூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அனிதாவின்  மரணம் குறித்து திமுக மீது புதிய  தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி கூறும் குற்றச்சாட்டு அவரது  மேம்போக்கான கருத்து. இதற்கு திமுக எந்த வகையிலும் காரணமாகாது. உண்மையில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என தடுப்பதற்கான முயற்சிகளில் திமுக ஈடுபட்டது.
மத்திய அரசு கல்வியில் ஒருமுகத் தன்னையை புகுத்த நினைக்கிறது. தமிழக பாடத் திட்டத்தில் படித்தவர்கள் பல்வேறு நாடுகளில் சிறந்த மருத்துவ சேவையை செய்து வருகின்றனர்.  தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற தமிழக அரசு தவறி விட்டது. மத்திய, மாநில அரசுகளின் நீட் தேர்வு அறிவிப்பால் மாணவி அனிதாவை இழந்திருக்கிறோம். மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது தமிழக அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது.
தமிழக அரசை பொருத்தவரை மாணவர்கள்,  விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்டவற்றை கண்டுகொள்ளாமல்  விழாக்கள் நடத்துகிறார்கள், பிரிகிறார்கள், இணைகிறார்கள், பிறகு கரம் கோர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பான்மை குறைந்துவிட்டது என அவர்களே கூறுகிறார்கள்.
இந்தச் சூழலில் மாநில அரசு பெரும்பான்மை இல்லாமல் கொள்கை முடிவை எடுப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஏற்புடையது இல்லை.
தமிழகத்தில் கடந்த 10 மாதமாக அதிமுக அரசால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை. இதைப் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில்  ஆட்சி அமையும்.
துணிச்சலாக எழுதுகின்ற பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களால்  தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் கடமையுமாகும்.
பேரறிவாளன் பரோலில் வெளி வந்தது மகிழ்ச்சி. பரோலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்துவது அவர்களது கட்சி சார்ந்த விஷயம். திமுக முன்னெடுக்கும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களுக்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆதரவு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் அதிமுக அரசால் புறக்கணிக்கப்படுகின்றன என்றார் திருச்சி சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com