திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணி நிறைவடைய இன்னும் சில காலம் ஆகும் என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி தெரிவித்தார்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ரயில்வே டிராக்மேன் மற்றும் ஊழியர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட் டறிந்தார். அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியது: கடினமாக உழைக்கும் ஊழியர்களை சந்தித்து பேச வந்தேன். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைய இன்னும் சில காலம் ஆகும்.
பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையிலான ரயில் பாதையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரிலிருந்து காரைக்கால் வரை மின்சார ரயில் இயங்கும் வகையில் டிசம்பர் மாதம் முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மன்னார்குடி-சென்னை விரைவு ரயில் திருவாரூர் வழியாக செல்ல வழித்தடம் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது தஞ்சாவூர் வழியாக சென்று வருகிறது. இதை திருவாரூர் வழியாக இயக்க ஆலோசிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.