திருவாரூரில் வியாழக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஒய்வூதியர்கள் 85 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதுடன் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மறியலில், மாநிலச் செயலர் சந்திரசேகரன், பொறுப்பாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன், தமிழரசன், அறிவழகன், பெத்தபெருமாள் மற்றும் 15 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை திருவாரூர் நகர காவல்துறையினர் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.