ரயில்வே துறை பெரு நகரங்களில் நேரடி முதலீட்டு வர்த்தக திட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியது.
இது தொடர்பாக தட்சிணரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப்பொதுச்செயலாளர் மனோகரன் நீடாமங்கலத்தில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ரயில்வே வசம் 43 ஆயிரம் ஹெக்டேர் காலி நிலம் உள்ளது. போக்குவரத்து விரிவாக்க தேவைகள் கணக்கிட்டு மீதி நிலங்களை வர்த்தக பயன்பாட்டிற்காக ரயில் நில வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்படைத்து வருகிறது.
தனியார்களை வர்த்தக நிறுவனங்கள் கட்ட அனுமதிப்பது , முப்பது முதல் எண்பது ஆண்டுகள் அடிமனைகள் குத்தகைகளுக்கு விட்டு நிதி திரட்டுவது, குத்தகை முடிவில் ரயில்வே வசம் அவற்றை ஒப்படைக்க வைப்பது திட்ட நோக்கம் ஆகும்.
வர்த்தக தாவாக்கள், நீதிமன்ற தலையீடுகள் , நீண்ட கால குத்தகையின் இறுதியில் நிலவும் அரசியல் சூழல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பெருமதிப்புமிக்க நிலங்களை ரயில்வே இழக்க நேரிடும். மேலும் நிரந்தர வருமானம் தரும் முதலீடுகள் இவை. எனவே, ரயில்வே துறை பெரு நகரங்களில் நேரடி முதலீட்டு வர்த்தக திட்டங்களையே நடைமுறைப் படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்துகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.