Enable Javscript for better performance
இரட்டை இலை சின்னத்தைக் கண்டு திமுகவினர் அச்சம்: அமைச்சர் ஆர்.காமராஜ்- Dinamani

சுடச்சுட

    

    இரட்டை இலை சின்னத்தைக் கண்டு திமுகவினர் அச்சம்: அமைச்சர் ஆர்.காமராஜ்

    By DIN  |   Published on : 22nd October 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக அணிகள் ஒன்றுசேர்ந்ததையடுத்து  இரட்டை இலை சின்னம்   கிடைத்துவிடும் என்பதால் திமுகவினர் அச்சம் அடைந்துள்ளனர்  என  தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்  கூறினார்.
     மன்னார்குடி நகர அதிமுக சார்பில், கட்சியின் 46-ஆம் ஆண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு பந்தலடியில் நடைபெற்றது.
     இதில் கலந்துகொண்டு கட்சியின் மாவட்டச் செயலரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் பேசியது:
     குடும்பக் கட்சி, குடும்ப ஆட்சியை எதிர்த்து உருவானது தான் அதிமுக. 1972-ஆம் ஆண்டு கட்சி தொடங்கி எம்.ஜி.ஆர். அவருக்கு பிறகு ஜெயலலிதா என திமுக எதிர்ப்பு நிலையை இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிவரை தொடர்வதால் தான் அதிமுகவை மக்கள் ஆதரித்து ஆட்சியில் அமர்த்தி வருகின்றனர்.
     எம்ஜிஆர் காலத்திலிருந்து துரோகிகளை சந்தித்து வெற்றி கண்டும் வரும் கட்சி அதிமுக.
     எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியும், தொண்டர்களின் பலமும் இருக்கும் வரை குடும்ப ஆட்சிக்கு அதிமுகவில் இடமில்லை. அந்த துரோகிகளுடன் இணைந்து இரட்டை இலை சின்னத்தினை முடக்க திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
     கூட்டத்தில் அதிமுக தலைமை கழகப் பேச்சாளர்கள் திருச்சி அரிகிருஷ்ணன், மு.மாரிமுத்து, கே.ஆர்.கருப்புசாமி ஆகியோர் பேசினர்.
     நிகழ்ச்சியில் நகரச் செயலர் ஏ.டி.மாதவன், அவைத் தலைவர் என்.சுவாமிநாதன், நகர்மன்ற முன்னாள் தலைவர் டி.சுதாஅன்புச்செல்வன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், ஒன்றியச் செயலர் கா.தமிழ்ச்செல்வம், வட்டச் செயலர் என்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    கூத்தாநல்லூரில்.....
    கூத்தாநல்லூர் தாலுக்கா லெட்சுமாங்குடியில் நடைபெற்ற கூட்டத்துக்கு  நகர  செயலாளர் டி.எம்.பஷீர் அகம்மது தலைமை வகித்தார்.  மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எல்.எம்.முகம்மது  அஷ்ரப்,  நகர  அவைத்   த லைவர்  அப்பாது ரை,  நகர  பொருளாளர் பாஸ்கரன்,  நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர்  ராஜ சேகரன், மாணவரணி  செயலாளர்  சொற்கோ உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.  நகர துணைச் செயலாளர் எம்.உதயகுமார் வரவேற்றார்.
    கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியது:
     விவசாயிகளின்  தேவைகளைப் பூர்த்தி செய்து வருபவர் தமிழக முதல்வர் பழனிசாமி.  மக்களை பற்றிச் சிந்திக்காதவர்கள்  திமுகவினர்.  மக்களுக்காக வாழ்ந்தவர்கள்தான் எங்கள் தலைவர்கள்.  திமுகவினர் அவர்களது குடும்பத்துக்காக வாழ்பவர்கள்.
    இன்னும் 10 அல்லது 15 நாட்களில் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும்.  எங்களை விட்டு இரட்டை இலை சின்னத் தைப்  பிரிக்க முடியாது.  ஜெயலலிதா போட்ட கட்டளைப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிமுகவினர்  என்றார். முன்னாள் கவுன்சிலர் பீ.மீரா மைதீன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai