Enable Javscript for better performance
திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காத 1000 பேருக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காத 1000 பேருக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 22nd October 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காத1,000 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
    திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட  வடக்குவீதி, கேக்கரை ராமகே சாலை, 8, 9-ஆவது வார்டுகளில் உள்ள சாலைகள், குடியிருப்புகளில் சுகாதாரப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    பின்னர் அவர் கூறியது:
    ராமகே சாலையிலுள்ள நான்கு சக்கர வாகன பழுதுநீக்கம் இடத்தில் தண்ணீர் மற்றும் சுற்றுப்புறம் தூய்மையற்று டெங்குக் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததற்காக அக்கடை உரிமையாளருக்கு ரூ. 15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் புதிய ரயில் நிலைய முகப்புப் பகுதியில் சுற்றுப்புறம் சுகாதாரமற்று இருந்ததை வெள்ளிக்கிழமை கண்டறிந்து, ரயில்வே பாதுகாப்பு அலுவலருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.  
    இதுவரை பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் தனியார் குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்களை சுற்றி டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தூய்மையின்றி வைத்துள்ள 1000 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
    மேலும் வீடு மற்றும் அரசு அலுவலகங்களை சுற்றி தூய்மையை பராமரிக்காதவர்களுக்கு இதுவரை  ரூ.2.57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 22 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    திருவாரூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 7 பேர் டெங்கு காய்ச்சலால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் திருவாரூர் மாவட்டம், இருவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றார் ஆட்சியர்.
    இந்த ஆய்வின்போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உடனிருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai