Enable Javscript for better performance
மின்னல் பாய்ந்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே சனிக்கிழமை வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது மின்னல் பாய்ந்து  பெண் உயிரிழந்தார்.
    மன்னார்குடி அருகேயுள்ள துண்டகட்டளையில்  சனிக்கிழமை மாலை 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வயலில் நடவு  நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்யத்  தொடங்கியதும்,வயலில் இருந்தவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். அப்போது  மின்னல் பாய்ந்ததில் அதே பகுதியைச்  சேர்ந்த புகழேந்தி மனைவி உமாராணி(30), கருப்பையா மனைவி வாசுகி(50) ஆகியோருக்கு காயமேற்பட்டதை அடுத்து  மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உமாராணி உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்காக வாசுகி, தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  இதுகுறித்து மன்னார்குடி ஊரக காவல்நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai