தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வித்வான்மானைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வித்வான்மானைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 6:44 am IST

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வித்வான்மானைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில், தீமிதி விழாவையொட்டி, ஏப். 6-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பால் காவடி, மாவிளக்கு முடிஎடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் செலுத்தினர். திங்கள்கிழமை நடைபெற்ற தீமிதி விழாவில், தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அடுத்து, படுகளக் காட்சியும் அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவையொட்டி, நாள்தோறும்  மகா பாரதக் கதை பாடல்கள் பாடப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.