முன்விரோத மோதலில் 3 பேர் காயம்: ஒருவர் கைது

மன்னார்குடியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
Published on
Updated on
1 min read

மன்னார்குடியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் பல்லவன். இவர், கடந்த ஜூலை 31 -ஆம் தேதி ரயில் நிலையம் அருகே தனது சுமை வேனில் திரைப்பட பாடலை அதிக சப்தத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது, அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு வந்த விழல்காரத்தெருவைச் சேர்ந்த திருமேணி, அதிக சப்தத்தில் பாடல் ஒலிபரப்புவதைக் கண்டித்தாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து, பல்லவனுக்கு ஆதரவாக மேலும் சிலர் வந்து தகராறில் ஈடுபட்டனராம். அருகிலிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பல்லவன் நண்பர்களுடன், ரயில்நிலையம் அருகில் உள்ள மதுக்கடையில் இருந்தபோது, அங்கு வந்த திருமேணி மற்றும் நண்பர்கள், இரும்பு கம்பியால் தாக்கியதில் ஓட்டுநர்களான பல்லவன் தரப்பைச் சேர்ந்த காந்திநகர் பி. சிலம்பரசன் (37), வ.உ.சி. சாலை சி. ரமேஷ் (25), மாளிகைமேடு உதயசந்திரன் (38) ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் மூவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிந்து திருமேணி தரப்பைச் சேர்ந்த மாளிகைமேடு சி. காரல்மார்க்ஸ் (38) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.