Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சாலை மறியல்: 67 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சாலை மறியல்: 67 பேர் கைது

    By DIN  |   Published on : 01st April 2018 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, திருவாரூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 67 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
    காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கெடு, மார்ச் 29 -ஆம் தேதி முடிவடைந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
    இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதேபோல, திருவாரூரில் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் - நாகை சாலையில் மேம்பால ரவுண்டானா அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. பாலு தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
    போராட்டத்தின்போது, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
    நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்... இதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் பால்ராசு தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai