Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஏப். 5-இல் ரயில் மறியல்: குளிக்கரையில் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஏப். 5-இல் ரயில் மறியல்: குளிக்கரையில் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்பு

    By DIN  |   Published on : 01st April 2018 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்.5-ஆம் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டங்களில், திருவாரூர் அருகே குளிக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் நிர்வாகி ஜி. பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் பெ. சண்முகம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
    தீர்மானங்கள்... காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்காததைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ஏப். 5 முதல் நடைபெறும் தொடர் ரயில் மறியல் போரட்டத்தில், திருவாரூர் அருகே உள்ள குளிக்கரை ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் திரளாக பங்கேற்பது.
    100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஏப்.12- இல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஒரு நாள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    புதிய நிர்வாகிகள் தேர்வு... கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்டத் தலைவராக எஸ். தம்புசாமி, செயலராக வி.எஸ். கலியபெருமாள், பொருளாளராக எஸ். சாமிநாதன் மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai