Enable Javscript for better performance
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்- Dinamani

சுடச்சுட

    

    மினி பேருந்து குளத்துக்குள் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.
    திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பகுதியில் இரண்டு மினி பேருந்துகள் வெள்ளிக்கிழமை உரசிக் கொண்ட விபத்தில் ஒரு பேருந்து குளத்துக்குள் கவிழ்ந்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார்.
    காயமடைந்தவர்களில் 24 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5ஆண்கள், 21 பெண்கள், 2 குழந்தைகள் ஆகியோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
    இவர்களை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டு ஆறுதல் கூறி, பழங்கள் வழங்கினார். மேலும், உரிய சிகிச்சையளிக்கும்படி மருத்துவர்களை அறிவுறுத்தினார்.
    இதேபோல், திருவாரூர் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமாரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களைப் பார்வையிட்டு, உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai